search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி"

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #cauverymanagementcommission #cauverywater
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த உடன் மேலாண்மை ஆணையம் குறித்த ஆவணங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

    இதில் மாநில அரசுகளின் சில கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலாண்மை ஆணையம் என அறிவிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இந்த மேலாண்மை ஆணையத்தில் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் 4 மாநில உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை 4 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

    அதன் அடிப்படையில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 3 மாநில உறுப்பினர் பெயர் பட்டியல் குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கர்நாடகா மட்டும் உறுப்பினர் பட்டியலை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.



    இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்தால் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்திருந்தார். 

    மேலும், உரிய நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர் பட்டியலை அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். 

    அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்னும் 3 நாட்களில் பரிந்துரை செய்யப்படும் என இன்று குமாரசாமி அறிவித்துள்ளார். #Cauverymanagementcommission #Cauverywater #karnatakaCM, #Kumaraswami
    மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். #cauverymanagementathority
    புதுடெல்லி:

    தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

    இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.



    கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது..

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #cauverymanagementathority #cauverywater #karnatakaCM #kumaraswami
    ×